திரைத்துறையின் வரப்பிரசாதம் “ INDIAN FILM MARKET” !
இந்திய திரைப்பட உலகில் அறிமுகமாகும் மிகப்பெரிய புதிய தளம் “ INDIAN FILM MARKET” !
இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான புதிய தளமாக INDIAN FILM MARKET தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
பல தசாப்தங்களாக, படைப்பிலிருந்து திரைக்கு அதைத்தாண்டி திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தான் INDIAN FILM MARKET தளம் உருவாகியுள்ளது.
இந்த முன்னோடியான முயற்சியின் தலைமைச் சிந்தனையாளர் மிஸ்டர் கண்ணன் (Founder, Indian Film Market) தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை, மேலும் முன்னணி மீடியா நிறுவனங்களில் 28 ஆண்டுகால தலைமைப் பொறுப்புகளில் அனுபவம் பெற்றவர். இந்திய திரைப்படத் துறையின் சவால்...
