இந்தியன் 2 _ விமர்சனம்
இந்தியன் 2 _ விமர்சனம்
1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நாயகனாக நடித்த இந்தியன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ஊழல் வாதிகளை களையெடுக்கும் இந்தியன் (தாத்தா), இதே குற்றச்சாட்டில் சிக்கும் தனது மகனையும் களையெடுப்பார். காவல்துறையினர் இவரை தேட வெளி நாட்டுக்குத் தப்பிவிடுவார்.
அவர் மீண்டும் இந்தியா வந்து, மறுபடி களையெடுக்கத் துவங்குவதுதான் இந்தியன் 2.
'பார்க்கிங் டாக்ஸ்' என்கிற பெயரில் யூடியூப் சேனலை சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜகன் ஆகியோர் நடத்துகின்றனர். நாட்டில் நடக்கும் லஞ்ச, ஊழல், அரசு தரப்பினரின் அலட்சியம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு அம்பலப்படுத்துகின்றனர்.
ஒரு கட்டத்தில், யூடியூப் வீடியோக்களால் பயனில்லை.. இந்தியன் தாத்தா திரும்பவந்து களையெடுக்க ஆரம்பித்தால்தான் நல்லது நடக்கும் என நினைக்கின்றனர்.
உடனே #ComebackIndian ஹாஷ்டேக்கை உருவாக்கி, நாட்டில் நடக்கும் அநீதிகளை பதிவிடுகின்...
