நவ-21ல் வெளியாகும் ‘இரவின் விழிகள்’!
குகைக்குள் 5 மணி நேரமாக மாட்டிக்கொண்டு சிக்கித்தவித்த சிக்கல் ராஜேஷின் ‘இரவின் விழிகள்’ படக்குழு!
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார்.
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர்.
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை ...

