Monday, August 31

Tag: Isari K Ganesh

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஐசரி கணேஷ் தீபாவளி பரிசு!

News
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு ஐசரி கே.கணேஷ் அவர்களின் தீபாவளி பரிசு. வேல்ஸ் பல்கலைக்கழக அதிபர் திரு ஐசரி கணேஷ் அவர்கள் வேட்டி, சேலை, இனிப்பு முதலிய அடங்கிய பரிசு பையை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்த கொரோன கால கட்டத்தில் இதுவரை அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவித்தொகையை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தியது நாம் அனைவரும் அறிந்ததே, மேலும் சங்க உறுப்பினர்களின் பென்ஷன் தொகை தனது தந்தையார் பெயரால் வழங்கி வருவது சுமார் 20 ஆண்டு காலமாக இதுவரையிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை, இலவச கல்வி என பலப்பல உதவிகளை செய்துவரும் ஐசரி கே கணேஷ் அவர்கள் எந்த பாகுபாடும்  இல்லாமல் இந்த கொரோனா சூழ்நிலையிலும் தானே முன்வந்து இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சென்னையில் உள்ள சங்க ...
கே.பாக்யராஜ், ஐசரி கே கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி

கே.பாக்யராஜ், ஐசரி கே கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி

News
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். ரஜினி...
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் கே.பாக்யராஜ், டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையிலான புதிய அணி!

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் கே.பாக்யராஜ், டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையிலான புதிய அணி!

News
வரும் ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில், கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஆகியோர் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி தேர்தலில் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மூத்த நடிகர் திரு கே. பாக்யராஜ் அவர்கள் தலைவர் பதவிக்கும், டாக்டர் ஐசரி கே கணேஷ் பொது செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். துணை தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா AL ஆகியோர் போட்டியிடுகிறார்கள். திருமதி பூர்ணிமா பாக்யராஜ் திருமதி சங்கீதா, திருமதி ஆர்த்தி கணேஷ், திருமதி காயத்ரி ரகுராம், திருமதி ரஞ்சனி, திருமதி சிவகாமி, திரு கே.ராஜன், திரு. பாண்டியராஜன், திரு. சின்னி ஜெயந்த், திரு. ரமேஷ் கண்ணா, திரு. ஷ்யாம், திரு. பரத், திரு. ஸ்ரீகாந்த், திரு. விமல், திரு. நிதின் சத்யா, திரு. அயூப் கான், தி...
10 பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்தும் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ்!

10 பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்தும் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ்!

News
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்து கொண்டனர்.   ஆர்ஜே பாலாஜியை நம்பி துணிச்சலாக படம் எடுத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. நாயகிக்கான எந்த பந்தாவும் இல்லாமல் பெருந்தன்மையாக, இயல்பாக பழகுபவர். குறித்த நேரத்தில் கேஎஸ் ரவிக்குமார் போல, சிறப்பாக படத்தை எடுத்து கொடுத்த இயக்குனர் கே.ஆர்.பிரபுவுக்கு நன்றி. யார் கேட்டாலும் நடிக்க மறுக்கும் ராம்குமார் அண்ணன் இதி...
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கும்  ‘LKG’

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கும் ‘LKG’

News
அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களை பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களை பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டி பிரபலமானதாகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படமான 'LKG' உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் சில யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, நியூஸிலாந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்ருதிஹாஸன் பாடிய சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டிருப்பது இந்த திரைப்படத்திற்கு ஒரு பெரிய பூஸ்டாக மாறியிருக்கிறது. கூடுதலாக, LKG படக்குழு ட்விட்டர் இந்தியாவில்  படத்தின் புரமோஷன் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.   இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு க...
குடும்பத்துடன் பார்க்கும் நல்ல பொழுதுபோக்கு படம் எல்.கே.ஜி.

குடும்பத்துடன் பார்க்கும் நல்ல பொழுதுபோக்கு படம் எல்.கே.ஜி.

News
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படத்தின் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.    அப்போது பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, "எல்.கே.ஜி எனது ஹோம் பேனரின் முதல் தயாரிப்பாகும். என் தந்தை ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைவதற்கு ஒரு கனவு கண்டார், ஆனால் துரதிருஷ்டவசமாக 46 வயதில் காலமானார். இந்த படத்தின் மூலம் அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய மொத்த குழுவும் ச...
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் வழங்கும் LKG…

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் வழங்கும் LKG…

News
'நகைச்சுவை' யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டி படங்களை எடுக்க நல்ல கதை மற்றும் சரியான பேக்கேஜிங் தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களை சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான "எத்தனை காலம் தான்' பாடல் நம்பமுடியாத வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது YouTube பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல்.    இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, "ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மைய...