ஜி.வி.பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘இசை மன்னன்’ ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது.
Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிசெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
திறமை மிகு இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரனின...









