புலிமடா திரைப்படத்தின் டீசர் வெளியானது!
புலியும் பட்டாம்பூச்சியும்... வெளியானது புலிமடா திரைப்படத்தின் டீசர்!
ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்கும் 'புலிமடா' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ஏ.கே.சாஜன் - ஜோஜு ஜார்ஜ் இணையில் உருவாகும் புலிமாடா படத்தின் அதிகாரபூர்வ டீசர் ஒரே நேரத்தில் புலியாகவும், பட்டாம்பூச்சியாகவும் மாறும் மனிதனின் தலைப்பைக் கொண்டு வெளியாகியுள்ளது. சுரேஷ் கோபி, திலீப், விஜய் சேதுபதி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் புலிமாடாவின் டீசரை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர்.
படத்தின் டீசரில் குறிப்பிட்டு சொல்லும்படி சில விஷயங்கள் உள்ளன, அதனால் டீஸர் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. ஒருவேளை ஜோஜுவின் நடிப்பு திறமை மீண்டும் ஒருமுறை புலிமடா படத்தில் நிரூபணமாகும். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே, அதாவது தற்போதே பார்வை...









