Sunday, October 25

Tag: iswarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்கும் திகில் படம்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திகில் படம்!

News
பல்வேறு விருதுகளைப் பெற்ற நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், ரதீந்திரன் ஆர்.பிரசாத்  இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 4', நீலகிரியில் படப்பிடிப்புடன் துவங்கியது.  கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இந்த மர்மம்-திகில்-திரில்லர் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றிருக்கிறார்கள். இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை மோகன் வசமும், ஆடை வடிவமைப்பு ஜெயலஷ்மி சுந்தரேசன் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறது....
ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களைச் சொல்லும் கனா

ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களைச் சொல்லும் கனா

News
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் 'கனா' திரைப்படம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ஒரு தனித்துவமான திரைப்படம். இதற்கு முன்பு திரையில் பார்த்திராத சிறப்பு அம்சத்துடன் வெளியாக இருக்கிறது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ், வெற்றியை நோக்கிய ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார். கூடுதலாக, ஒரு தந்தை தன் மகளின்  கனவுகளை நிறைவேற்றுவதில் அவளுக்கு பக்க பலமாக இருப்பதன்  முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட இந்த படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது.    இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, "எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த  டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மொத்த குழு...