திரைப்பட விமர்சனம் ஜே பேபி
திரைப்பட விமர்சனம் ஜே பேபி
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் சுரேஷ் மாரி இயக்கி உள்ள படம், ஜெ.பேபி.
ஊர்வசி கதை நாயகியாக நடிக்க, தினேஷ், மாறன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
ஊர்வசிக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார்.
மனச்சிதைவுக்கு ஆளான ஊர்வசி அக்கம்பக்கத்தினர் வீட்டை பூட்டி விடுவது, போலீஸ் உள்ளிட்ட பலரிடம் எக்குதப்பாக பேசி வம்பை விலை கொடுத்து வாங்குவது என தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறார்.
இது அவரது மகன்கள் மற்றும் மகள்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்கின்றனர். அங்கு இருப்பவர்களுடன் அன்பாக பழகுகிறார் ஊர்வசி.
ஒருநாள் இவரை மருத்துவமனையில் விட்டுவிட்டு மகன் மற்றும் மகள் தத்தம் வீடுகளுக்குச் சென்றுவிட அவ...
