ஜீவி 2 – விமர்சனம்
ஜீவி 2 - விமர்சனம்
ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஜீவி திரைப்படம், அதன் வித்தியாசமான கதைக் கருவுக்காகவும், புதுமையான திரை வடிவத்துக்காகவும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடி படத்தில் நடித்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல பெயரையும் புகழையும் தேடித் தந்தது.
ஜீவி படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பே இப்போது இரண்டாம் பாகம் உருவாகக் காரணமாக அமைந்திருக்கிறது. ஆஹா ஓடிடியில் ஆகஸ்ட் 19ந்தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
ஜீவி 2 முதல் பாகத்தைப் பார்க்காமல் தவற விட்டவர்களுக்காக இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்திலேயே முதல் பாகத்தின் முக்கிய பகுதிகளை தொகுத்துக் காட்டியிருப்பதால் முதல் பாகத்தைப் பார்க்காதவர்களும் ஜீவி 2 படத்துக்குள் எளிதாக நுழைந்து விடலாம்.
நாயகன் வெற்றி, ஹவுஸ் ஓனர் அக்காவின் பார்வையற்ற மகளை மணந்து ஷேர் ஆட்டோ ஓட்டி தன் வாழ்க்கை...
