Saturday, October 31

Tag: Joju George

“ஜகமே தந்திரம்” படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்!

News
இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் ட்ரெய்லரை Netflix கடந்த வாரம் வெளியிட்டது. வெளியான கணத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற ட்ரெய்லர், இணையம் வழியே, உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் லோக்கல் கேங்ஸ்டராக தனுஷ் நடிக்க, அமெரிக்க பிரபல நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் மிரட்டும் கேங்ஸ்டர் சிவதாஸ், பாத்திரத்தில் நடித்துள்ளார். மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் பெரும் புகழை குவித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜ், “ஜகமே தந்திரம்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பெரும் எதிர்பார்ப்புடன் படம் வெளியாவதில் அவர் பெரும் உற்சாகத்தில் உள்ளார்...