“ஜகமே தந்திரம்” படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்!

0

 278 total views,  1 views today

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் ட்ரெய்லரை Netflix கடந்த வாரம் வெளியிட்டது. வெளியான கணத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற ட்ரெய்லர், இணையம் வழியே, உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் லோக்கல் கேங்ஸ்டராக தனுஷ் நடிக்க, அமெரிக்க பிரபல நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் மிரட்டும் கேங்ஸ்டர் சிவதாஸ், பாத்திரத்தில் நடித்துள்ளார். மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் பெரும் புகழை குவித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜ், “ஜகமே தந்திரம்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பெரும் எதிர்பார்ப்புடன் படம் வெளியாவதில் அவர் பெரும் உற்சாகத்தில் உள்ளார். ஜோஜு ஜார்ஜ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் தீவிர விசிறி இப்படத்தில் அவருடனும் உலகளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடனும் பணிபுரிந்ததில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

இது குறித்து ஜோஜு ஜார்ஜ் கூறியதாவது…
நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மிகப்பெரிய விசிறி. “பீட்சா” படம் பார்த்து விட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை. மலையாளத்தில் பிரபலமாக தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத்தொடங்கின. இறுதியாக இப்படத்தின் எடிட்டர் டிமல் டென்னிஸ் மற்றும் விவேக் ஹர்ஷன் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களை சந்தித்தேன். இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்தார் கார்த்திக். படத்தில் மிகப்பெரிய பாத்திரம் என்பதால் என்னிடம் ஒரு காட்சியை விவரித்து, நடித்து காட்ட சொன்னார். எனக்கு தெரிந்த அரைகுறை தமிழில், நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். ஆனால் அவர் என்னை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ குறித்து கூறும்போது…

படத்தில் என் எதிர் பாத்திரமாக நடிப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ என்பது எனக்கு தெரியும். நான் நேரில் சந்தித்த முதல் ஹாலிவுட் நடிகர் அவர்தான். வாழ்க்கை தரும் ஆச்சர்யங்கள் பெரும் சந்தோஷமாக இருக்கிறது. நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடன் நடிப்பது மிகப்பெரும் பெருமை என்றார்.

பீட்டர் ( ஜேம்ஸ் காஸ்மோ ) மற்றும் சிவதாஸ் (ஜோஜு ஜார்ஜ்) இருவருக்குமான சுவாரஸ்யமான போரை காணத்தவறாதீர்கள் Netflix தளத்தில் 18 ஜூன் அன்று உலகம் முழுதும் வெளியாகிறது “ஜகமே தந்திரம்” திரைப்படம்.

Share.

Comments are closed.