Saturday, October 3

Tag: JSK FILM CORPORATION

இறுதி கட்ட பணியில் JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம்!

இறுதி கட்ட பணியில் JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம்!

News
JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம் Post-Production கட்டத்திற்குள் நுழைந்துள்ளது; டப்பிங் பணிகள்  தொடங்கின! JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படம் அதிகாரப்பூர்வமாக போஸ்ட்-ப்ரொடக்ஷன் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதன் ஒரு முக்கிய கட்டமாக, டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தற்போது படத்தின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் கலை சார்ந்த அம்சங்களும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்படும் வகையில், போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு முழு கவனம் செலுத்தி வருகிறது. படப்பிடிப்பின் போது பதிவான நடிப்பின் தீவிரமும் இயல்பும் குன்றாமல் இருக்க, அப்படத்தின் இயக்குநர் எஸ்.கே. ஜீவா டப்பிங் பணிகளை அவரே நேரடியாக மேற்பார்வை செய்து வருகிறார். தயாரிப்பாளரும் முதன்மை நடிகருமான JSK சதீஷ் குமார், படத்தின் உர...
வெற்றி நடை போடும் ‘ஃபயர்’

வெற்றி நடை போடும் ‘ஃபயர்’

News
' *'ஃபயர்' திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கொண்டாட்டம், நாயகன் பாலாஜி முருகதாசுக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார் ஜெ எஸ் கே* *இரண்டாவது வாரத்தில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'; திரையரங்குகள், காட்சிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு* கடந்த வாரம் வெளியான 'ஃபயர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இயக்குநராகவும் அழுத்தமான முத்திரை பதித்துள்ள வெற்றிப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜெ எஸ் கே, 'ஃபயர்' திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் சென்னையில் உள்ள காசி டாக்கீஸில் நேற்றிரவு (பிப்ரவரி 19) கொண்டாடினார். வார நாளின் இரவுக் காட்சியிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய 'ஃபயர்' திரைப்படம் நிறைவடைந்தவுடன் திரையரங்கு நிர்வாகிகளின் உற்சாக அனுமதியோடு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளுக்கு மத்தியில் படத்தின் வெற்றியை கேக் வெட்டி குழ...
இயக்குநர் அவதாரம் எடுத்த ஜே எஸ் கே!

இயக்குநர் அவதாரம் எடுத்த ஜே எஸ் கே!

News
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான 'ஃபயர்' இசை வெளியீடு! பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, 'அநீதி', 'வாழை', உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'ஃபயர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும். ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் 'ஃபயர்' திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத...
‘கங்குவா’ படத்துடன் வெளியாகும் ‘ஃபயர்’ படத்தின் டீசர்!

‘கங்குவா’ படத்துடன் வெளியாகும் ‘ஃபயர்’ படத்தின் டீசர்!

News
சூரியாவின் 'கங்குவா' படத்துடன் வெற்றிப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான 'ஃபயர்' டீசர் நவம்பர் 14 அன்று திரையிடப்படுகிறது! பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, 'அநீதி', 'வாழை', உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'ஃபயர்' திரைப்படத்தின் முன்னோட்டம் (டீசர்) சூரியா நடித்துள்ள 'கங்குவா' படத்துடன் நவம்பர் 14 முதல் திரையரங்குகளில் காண்பிக்கப்பட உள்ளது. முன்னதாக, இன்று (நவம்பர் 13) மாலை முன்னணி திரை பிரபலங்கள் 'ஃபயர்' டீசரை சென்னையில் வெளியிட்டனர். 'ஃபயர்' திரைப்படத்தை இதுவரை பார்த்துள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலைய...
புதிய இயக்குனர்களுக்கு  வாய்ப்பு தரும் JSK FILM CORPORATION

புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரும் JSK FILM CORPORATION

News
JSK FILM CORPORATION புதிய இயக்குனர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! அன்புடையீர் வ‌ண‌க்க‌ம்! JSK FILM CORPORATION நிறுவனம் இன்று 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய சிந்தனை, புதிய கோணம், புதிய பாதை என்று தனித்தன்மையுடன் செயல்பட்டு வித்தியாசமான கதைகளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் - வெளியிட்டும் மக்களிடம் கொண்டு சேர்த்து 2 முறை பெருமைக்குரிய தேசிய விருதுகளையும், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் பெற்று மக்களின் நல் ஆதரவோடு இந்நிறுவனம் 15-வது வருடத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட புதிய இயக்குனர்களையும் 6-க்கும் மேற்பட்ட புதிய இசையமைப்பாளர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை எங்கள் நிறுவனத்திற்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் எங்கள் நிறுவனம் சொந்தமாக நடத்திவரும் Youtube சேனலில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர...