Friday, October 23

Tag: Jsk satish kumar

படப்பிடிப்பின் போது நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் JSK சதீஷ்குமாருக்குக் காயம்!

படப்பிடிப்பின் போது நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் JSK சதீஷ்குமாருக்குக் காயம்!

News
  புதிய படப்பிடிப்பின் போது நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் JSK சதீஷ்குமாருக்குக் காயம்; இரண்டு வாரங்கள் முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை! பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான JSK சதீஷ்குமார், தனது அடுத்த புதிய திரைப்படத்தின் விறுவிறுப்பான சண்டைக் காட்சியின் படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்த போதிலும், இந்த அதிரடி ஸ்டண்ட் காட்சியின் போது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. விபத்து நடந்த உடனடியாக, JSK சதீஷ்குமாருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவர்களால் விரிவான பரிசோதனை செய்யப்பட்டது. அவர் முழுமையாக குணமடைவதை உறுதி செய்வதற்காக, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஓய்வு (Bed Rest) எடுக்குமாறு மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். இவ்விபத்து துரதிர்ஷ்டவசமானது என...
60 வயது ஆசிரியரை சுற்றி நடக்கும் கதை ‘குற்றம் கடிதல் 2’

60 வயது ஆசிரியரை சுற்றி நடக்கும் கதை ‘குற்றம் கடிதல் 2’

News
தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் 'குற்றம் கடிதல் 2' திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்! விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான‌ ஜே எஸ் கே, தற்போது 'குற்றம் கடிதல் 2' படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 2015ம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற ஜே எஸ் கே தயாரிப்பில் உருவான‌ 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ் கே ஜீவா எழுதி இயக்குகிறார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது. ஆர் பார்த்திபன் நடித்த 'புதுமை பித்தன்', கார்த்திக் நடித்த 'லவ்லி' படங்களை இயக்கிய ஜீவா, 'அழகிய தமிழ் மகன்', சமீபத்தில் வெளியான 'அநீதி', ஜே எஸ் கே இயக்கத்தில் உருவாகி வரும் 'ஃபயர்' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் ...
தயாரிப்பாளராக தேசிய விருது வென்ற சதீஷ் குமார் இயக்குநராகவும் தேசிய விருது வெலவாரா?

தயாரிப்பாளராக தேசிய விருது வென்ற சதீஷ் குமார் இயக்குநராகவும் தேசிய விருது வெலவாரா?

News
வெற்றிப்பட தயாரிப்பாளர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுக்கும் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் 'ஃபயர்' *பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் பரபர திரில்லர்* பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜே எஸ் கே இயக்குநராக தற்போது அவதாரம் எடுத்துள்ளார். இவர் எழுதி இயக்கம் திரைப்படத்திற்கு 'ஃபயர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் மற்றும் காயத்ரி ஷான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் விறுவிறுப்பான திரில்லர் ஆகும். பெண்களின் விழிப்புணர்வு குறித்து பேசும் 'ஃபயர்' திரைப்படம் குற...
நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும்தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் ஜே எஸ் கே சதீஷ்குமார்!

நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும்தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் ஜே எஸ் கே சதீஷ்குமார்!

News
தயாரிப்பாளர்-விநியோகஸ்தராக தடம் பதித்த பின்னர் தற்போது நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும் ஜே எஸ் கே சதீஷ்குமார்! பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரும், தேசிய விருதுகள் வென்ற 'தங்க மீன்கள்', 'குற்றம் கடிதல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'மதயானைக் கூட்டம்', 'தரமணி', 'புரியாத புதிர்' மற்றும் விரைவில் வெளியாக உள்ள 'அண்டாவ காணோம்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான ஜே எஸ் கே சதீஷ்குமார், நடிகராக தற்போது புதிய பரிமாணம் காட்டி வருகிறார். வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அநீதி' திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்த ஜே எஸ் கே சதீஷ்குமார், தனது சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வருகிறார். 2017-ம் ஆண்டு ராம் இயக்கத்தில் உருவான 'தரமணி' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தொடங்கிய ஜ...