காழ் _ விமர்சனம்
காழ்: திரை விமர்சனம்
“ஃபாரின் நேசனாலிட்டி வாங்கிட்டா செல்வ செழிப்பில் மிதக்கலாம்!” என்கிற எண்ணம்தான் இங்கே பலருக்கும் இருக்கிறது. ஆனால், அங்கேயும் பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் நம்மவர்கள் வாழ்கிறார்கள் என்பதை இயல்பான காட்சிகளில் எடுத்துச் சொல்கிறது காழி.
ஆஸ்திரேலிய நாட்டில் தன் மனைவி மிமி லியோனார்டுடன் வாழ்கிறார் யுகேந்திரன் வாசுதேவன். தங்களுக்கென சொந்த வீடு வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்; அதற்காக கடுமையாக வேலை பார்க்கிறார்கள்.
ஆனாலும் வீடு கட்டத் தேவையான பணம் குறைகிறது. ஆகவே வங்கிக் கடன் பெற முயற்சிக்கிறார்கள்.
ஒரு நபர், தான் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி, பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விடுகிறார்.
அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
இன்னொரு பக்கம், நித்யா பாலசுப்பிரமணியன் - சித்தார்த் அன்பரசு ஆகியோரின் காதல் கதையும் ஓடுகிறது.
ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆன, நமது தமிழர்...
