கடத்தல்காரன் – விமர்சனம்
கடத்தல்காரன் - விமர்சனம்
திருச்சிக்கு அருகிலுள்ள நகர் ஒன்றில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் திருட்டை தொழிலாகக் கொண்டவர்கள் என்று அவர்களைப் பற்றி உண்மையும் பொய்யுமாக பல கதைகள் தென் தமிழகத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறைய இருந்தன.
அப்படிப்பட்ட ஒரு ஊரை களமாகக் கொண்டு கதை, வசனம் எழுதி ஒரு வித்தியாசமான படத்தை தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.குமார். கதையுடன் திரைக்கதை வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.
கல்யாண வீடு ஒன்றில் திருடுவதற்காக நான்கு பேர் சேர்ந்து ஒரு காரில் செல்கின்றனர். திருமணம் பிடிக்காத நாயகி காதலனுடன் கம்பி நீட்டுவதற்காக அவன் அனுப்பும் காருக்காக காத்திருக்கிறாள். காதலன் அனுப்பிய கார் என நினைத்து திருடவந்தவர்கள் காரில் ஏறி அவர்கள் ஊருக்கே வந்து விடுகிறாள்.
நாயகியின் அப்பா அந்த ஊருக்கே பொது எதிரி எனத் தெரிந்து அவளை தப்பி செல்ல முடியாமல் ஊர்ப் பெரியவர...
