காடுவெட்டி _ விமர்சனம்
காடுவெட்டி _ விமர்சனம்
பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கிய கிராமப்பகுதி. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவர் காதலிக்கின்றனர்.
இதை அந்தப் பெண்ணின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
அதோடு, “உன் மகளை கொன்றுவிடு” என அந்தப் பெண்ணின் தந்தைக்கு உத்தரவு போடுகின்றனர்.
அவரோ, தனது மகளை பணம், நகை கொடுத்து காதலனுடன் அனுப்பி வைக்கிறார்.
காதலனின் சாதியைச் சேர்ந்த தலைவர், ‘கெட்ட’ நோக்கத்துடன் செயல்பட.. காதலர்கள் வெளியூர் வந்து வசிக்கிறார்கள்.
அவர்களைக் கொல்ல திட்டமிடுகிறார் சாதித் தலைவர்..
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்து உள்ளார்.
வழக்கம்போலவே முரட்டுத்தனமான கதாபாத்திரம். மீசை முறுக்கி, அடிக்குரலில் பேசி கவர்கிறார்.
தன் சாதி மக்கள் மீது அவரது அளவு கடந்த பாசம், சாதி தலைவர் மீதான நேசம், மனைவி மீதான காதல், எதிர...
