Friday, January 24

காடுவெட்டி _ விமர்சனம்

Loading

காடுவெட்டி _ விமர்சனம்

பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கிய கிராமப்பகுதி. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவர் காதலிக்கின்றனர்.

இதை அந்தப் பெண்ணின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

அதோடு, “உன் மகளை கொன்றுவிடு” என அந்தப் பெண்ணின் தந்தைக்கு உத்தரவு போடுகின்றனர்.

அவரோ, தனது மகளை பணம், நகை கொடுத்து காதலனுடன் அனுப்பி வைக்கிறார்.

காதலனின் சாதியைச் சேர்ந்த தலைவர், ‘கெட்ட’ நோக்கத்துடன் செயல்பட.. காதலர்கள் வெளியூர் வந்து வசிக்கிறார்கள்.

அவர்களைக் கொல்ல திட்டமிடுகிறார் சாதித் தலைவர்..
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

வழக்கம்போலவே முரட்டுத்தனமான கதாபாத்திரம். மீசை முறுக்கி, அடிக்குரலில் பேசி கவர்கிறார்.

தன் சாதி மக்கள் மீது அவரது அளவு கடந்த பாசம், சாதி தலைவர் மீதான நேசம், மனைவி மீதான காதல், எதிரிகளை பந்தாடும் விதம் என ரசிக்க வைக்கிறார் ஆர..கே.சுரேஷ்.

நாயகியின் தந்தையாக வரும் ( திரைப்பட இயக்குநர்) சுப்ரமணிய சிவா, சிறப்பாக நடித்து உள்ளார். மகளை கொல்ல வேண்டிய நிலை.. அப்போது அவரது முகபாவம்.. நடை.. மனம் நொந்த பேச்சு… அற்புதமான நடிப்பு.

அறிமுக இசையமைப்பாளர் சாதிக்,  இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுடன் இணைந்து, அறிமுக படத்திலேயே பெயர் பெற்றுத்தரும் அளவிற்கு இரண்டு பாடல்களைக் கொடுத்துள்ளார்.

கிராமப்புற வாழ்வியலில் உள்ள சில பழக்க வழக்கங்களை காட்சிப்படுத்தியுள்ளதை பாராட்டலாம்.

புகழேந்தியின் ஒளிப்பதிவு படத்தில் இருக்கும் ப்ளஸ் பாய்ண்டுகளில் ஒன்று.

கல்வியும், பொருளாதார வளமும் உள்ள குடும்பம் காதலை எப்படி அணுகுகிறது.. பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த குடும்பம் எப்படி காதலை எதிர்கொள்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.

மெயின் கதை,  கிராமத்து காதல்தான்!
இதன் ஊடாக சாதி விவகாரத்தையும் தொட்டு இருக்கிறார்கள். இவ்வகை கதையில் குத்து, வெட்டு, ரத்தம் என்பது தவிர்க்க முடியாததுதான் என்றாலும் குறைந்தபட்சம் அவற்றை குறைத்திருக்கலாம்.