கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டு்க்களை குவித்த ‘கிடா’ திரைப்படம்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் ரவி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படமான “கிடா” , கோவா இந்தியன் பனோரமா திரையடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது !!
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள்.
கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் த...


