Friday, May 1

Tag: Kallan movie

பாரம்பரியத்தின் பெருமை பேசும் ‘கள்ளன்’ !

பாரம்பரியத்தின் பெருமை பேசும் ‘கள்ளன்’ !

News
யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’.  கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும் ஒரு புகழ்பெற்ற ஆளுமை நடிக்கும்போது, அந்த படைப்பு மேலும் புகழ் பெறுகிறது. அத்தகைய குணங்களைக் கொண்டிருக்கும் கரு பழனியப்பன், எழுத்தாளர்  சந்திரா இயக்கும்  'கள்ளன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.  இயக்குநர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் சினிமா கற்ற இயக்குனர் சந்திரா  ‘கள்ளன்’ பற்றிக் கூறும்போது, "கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்த போதே இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.அதை அப்படியே உள்வாங்கியதுடன், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து தன்னைத்  தயார் படுத்திக்கொண்டார...