‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ புதிய இணைய தொடர்!
எம்எக்ஸ் பிளேயரில் பிரத்யேகமாக, இயக்குனர் ஜஸ்வினி இயக்கத்தில் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ புதிய இணைய தொடர் ஜூலை 22 வெளியாகிறது
இணையத்தில் வெளியான ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை’ முதல் பாகத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, சின்னத்திரை செலிபிரிட்டி தம்பதியர் மிர்ச்சி செந்தில் குமாரும், அவரது மனைவி ஸ்ரீஜா சந்திரனும் இணைந்து நடிக்கும் புதிய இணைய தொடர் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’. இத்தொடரை ‘மிர்ச்சி பிளே ஒரிஜினல்’ தயாரிக்க, இயக்குனர் ஜஸ்வினி இயக்கியிருக்கிறார்.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் அசோசியேட்டாக மன்மதன் அம்பு, கோச்சடையான், போலீஸ்கிரி மற்றும் லிங்கா ஆகிய படங்களுக்கும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ரங்கூன் திரைப்படத்திற்காக இணை இயக்குனராகவும் பணியாற்றிய ஜஸ்வினி இத்தொடரை இயக்கியிருக்கிறார். கபிலன் வைரமுத்து எழுத்தில், விஷ்வா ஒளிப்பதிவில், எடிட்டர் பிரேம் ...
