Saturday, December 14

‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ புதிய இணைய தொடர்!

Loading

எம்எக்ஸ் பிளேயரில் பிரத்யேகமாக, இயக்குனர் ஜஸ்வினி இயக்கத்தில் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ புதிய இணைய தொடர் ஜூலை 22 வெளியாகிறது

இணையத்தில் வெளியான ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை’ முதல் பாகத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, சின்னத்திரை செலிபிரிட்டி தம்பதியர் மிர்ச்சி செந்தில் குமாரும், அவரது மனைவி ஸ்ரீஜா சந்திரனும் இணைந்து நடிக்கும் புதிய இணைய தொடர் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’.   இத்தொடரை ‘மிர்ச்சி பிளே ஒரிஜினல்’ தயாரிக்க, இயக்குனர் ஜஸ்வினி இயக்கியிருக்கிறார்.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் அசோசியேட்டாக மன்மதன் அம்பு, கோச்சடையான், போலீஸ்கிரி மற்றும் லிங்கா ஆகிய படங்களுக்கும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ரங்கூன் திரைப்படத்திற்காக இணை இயக்குனராகவும் பணியாற்றிய ஜஸ்வினி இத்தொடரை இயக்கியிருக்கிறார்.  கபிலன் வைரமுத்து எழுத்தில், விஷ்வா ஒளிப்பதிவில், எடிட்டர் பிரேம் படத்தொகுப்பில், உருவாகியிருக்கும் இத்தொடர், எம்எக்ஸ் பிளேயரில் வரும் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது.

இத்தொடர், ஒரு உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த காதல் தம்பதியர், தம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் அன்பையும் பாசத்தையும், காதலையும், மோதலையும், ஜனரஞ்சகமாக படம் பிடித்து காட்டுகிறது. காதல் திருமணம் என்றாலே, மோதல் தவிர்க்க முடியாத நிலையில், இரு வேறு மாநிலங்களை சேர்ந்த தம்பதியர் என்பது கொஞ்சல் கூடுதல் சுவராஸ்யத்தை இத்தொடருக்கு தந்து விடுகிறது.

உலகின் நம்பர் 1, பொழுதுபோக்கு ஆப், எம்எக்ஸ் பிளேயர் தனது சந்தாதாரர்களுக்கு, உயர்தர டிஜிட்டல் நிகழ்ச்சிகளை முதலில் வழங்குவதில் முன்னணி வகிக்கிறது. சுமார் 7.5 கோடி நித்திய பார்வையாளர்களைக் கொண்ட இத்தளம், இந்நாட்டின் மிகப் பெரிய பொழுதுபோக்கு தளம் என்றும், இரண்டு ஸ்மார்ட் போன்களில் ஒன்றில் தரவிறக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவே ‘பொழுதுபோக்கு’ என்று வரையறுக்கும் வகையில், தரமான நிகழ்ச்சிகளை அனைவரையும் கவரும் வண்ணம் இயங்கும் இந்த ஆப், வாசகர்களுக்கு முற்றிலும் இலவசமாக, விளம்பர வருவாய் மாடலில் இயங்கி வருகிறது.  எம்எக்ஸ் பிளேயர் தனது தரமான, பன்முகப்பட்ட இணையதள ஸ்ட்ரீமிங் காணொளி லைப்ரரியின் மூலம், சுமார் ஒரு லட்சம் மணிநேர நிகழ்ச்சிகளை, பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வழங்குவதால்,  பன்முகப்பட்ட வாசகர்களை தன்னகத்தேப் பெரிதும் ஈர்த்து வருகிறது.  எம்எக்ஸ் ‘ஒரிஜினல் ஸ்லேட் தொடர்கள்’ மூலம் டிராமா, காமெடி, ரியாலிட்டி மற்றும் ரொமான்ஸ் என அனைத்து தரப்பினருக்குமான உயர்தர நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. டைம்ஸ் இண்டர்நெட்டின் (டைம்ஸ் குழுமத்தின் இணையதள அங்கம்), எம்எக்ஸ் பிளேயர் கடந்த 2012 முதலே தொடர்ந்து முதல் பத்து வரிசையில் இடம் பெற்றிருக்கும் ஆன்ட்ராய்ட் ஆப் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ், மற்றும் இணைய தளத்தில் காணலாம்.

சுமார் 1.3 கோடி பார்வையாளர்களை ஈர்த்த இதன் முதல் பாகத்திற்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம், இக்குழுவினரை அடுத்த பாகம் படைக்க தூண்டுதலாக அமைந்துள்ளது. ஒரு படைப்பாளியின் கண்களுக்கு அன்றாட நிகழ்வுகளில் இருந்து கிடைக்கும் ஒரு உத்வேகம், எளிதாக அனைவரையும் தன்னகத்தே ஈர்க்கும் சக்தியையும், வாசகர்களுக்கு ஒவ்வொரு நிகழ்வுகளோடும் தன்னை ஒப்புமைப்படுத்தி பார்த்து கொள்கிற வாய்ப்பும் கிடைப்பதால், அத்தகைய மகத்தான வெற்றி ஒரு படைப்புக்கு கிடைத்து விடுகிறது.

மிர்ச்சி செந்தில் குமாரும், அவரது மனைவி ஸ்ரீஜா சந்திரனும் நடித்திருக்கும் விதம், காட்சிகளில் மிளிரும் அன்பும், காதலும், அன்றாட வேடிக்கைகளும் ரசிகர்களை கவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடர் குறித்து ஸ்ரீஜா சந்திரன், ‘இத்தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியும் அன்பும் பாராட்டுகளும் எங்களை மிகவும் நெகிழ செய்தன. எங்களுக்கு உடனடியாக அதன் அடுத்த பாகத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்தோம். நிஜ வாழ்வில் செந்திலும், ஸ்ரீஜாவும் நடந்து கொள்ளும் விதத்தை பதிவு செய்வதில் எங்களுக்கு எந்தவித சிரமமுமில்லை. நாங்கள் நடிக்க வேண்டியதில்லை’

இதனை தொடர்ந்து மிர்ச்சி செந்தில் குமார், ‘ஒரு முழுமையான ரொமான்டிக் காமெடி மிகப்பெரிய வரவேற்ப்பையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. முதல் பாகத்திற்கு வந்த ஒவ்வொரு பின்னூட்டத்தையும் படித்து, நாங்கள் உணர்ந்து கொண்டது யாதெனில், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வுடன் இதனை தொடர்புபடுத்திப் பார்த்து கொள்ளும் விதம் எங்களை மிகவும் கவர்ந்தது. இத்தொடரில் நாங்கள் மிகவும் கவனமாக, ஆன்லைன் ஷாப்பிங் அடிக்ஷன், சாலைகளில் அதிவேக பயணம், அதிகப்படியான ஸ்மார்ட் போன் உபயோகம், தவறாகிப் போன விடுமுறை திட்டங்கள் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் தொடர்பு படுத்தி கொள்ளும் விதத்தில் அன்றாட நிகழ்வுகளை தொகுத்து வழங்கியிருக்கிறோம். இத்தொடரின் வெளியீடு மற்றும் வாசகர்களின் கருத்துகளுக்காக நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.’

எம்எக்ஸ் பிளேயரின் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ ஆறு எபிசொடுகளில், ஸ்ரீஜா சந்திரன் மற்றும் மிர்ச்சி செந்தில்குமாரின் வாழ்வை படம் பிடித்துக் காட்டும் ஒரு அருமையான ரொமாண்டிக் காமெடி தொடர். இயக்குனர் ஜஸ்வினி இயக்கியிருக்கும் இத்தொடர், உங்களது வாழ்வும், ஒரு செலிப்ரிட்டியின் வாழ்வும் ஒத்திருக்கும் விதத்தை மிகவும் அழகாக படம் பிடித்து காட்டுகிறது.