Thursday, September 24

Tag: kamal hasan

ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை!

ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை!

News
ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் - கமல்ஹாசன் அறிக்கை! கமல்ஹாசன் அறிக்கையின் சாராம்சம்: என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே, மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும். இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்...
ஜியோ ஹாட்ஸ்டார் ‘சவுத் அன்பாண்ட்’ நிகழ்வில் திரு.கமல் ஹாசன் அவர்கள் பேசியது…

ஜியோ ஹாட்ஸ்டார் ‘சவுத் அன்பாண்ட்’ நிகழ்வில் திரு.கமல் ஹாசன் அவர்கள் பேசியது…

News
ஜியோ ஹாட்ஸ்டார் 'சவுத் அன்பாண்ட்' நிகழ்வில் திரு.கமல் ஹாசன் அவர்கள் பேசியது... வணக்கம், இந்த மேடையை நமது தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் திரு எம். பி. சாமிநாதன் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அத்துடன் ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கெவின் வாஸ், ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் (தெற்கு) தலைவர் திரு. கிருஷ்ணன் குட்டி, ஜியோ ஸ்டாரின் மார்க்கெட்டிங் மற்றும் SVOD தலைவர் திரு சுஷாந்த் ஸ்ரீ ராம் , ஜியோ ஸ்டார் தமிழ் - நிர்வாக துணைத்தலைவர் திரு ஆர். பாலச்சந்திரன் மற்றும் தொழில்துறையின் புகழ்பெற்ற உறுப்பினர்களுக்கும், என்னுடைய நண்பர்களான மோகன்லால் - நாகார்ஜுனா - விஜய் சேதுபதி - ஆகியோருக்கும் எனது வணக்கங்கள்.‌ இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை சாதாரணமாக வளர்ச்சி அடையவில்லை. அது மாற்றத்தை கண்டு கொண்ட...
‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

News
தக் லைஃப் - முதல் பாடலை கமல் ஹாசன், மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிலம்பரசன் டி.ஆர், மற்றும் த்ரிஷா வெளியிட்டார்கள்! ஜிங்குச்சா - வெட்டிங் ஆந்தம் (கல்யாணப் பாட்டு) பாடல் வரிகள் கமல் ஹாசன், இசை ஏ.ஆர். ரஹ்மான். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் முதல் பாடலான, 'ஜிங்குச்சா' கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது. திரையுலக ஜாம்பவான்கள் கமல் ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் அஷோக் செல்வன் பங்கேற்ற இந்நிகழ்வு, இந்திய சினிமாவின் துணிச்சலான புதியதோர் அத்தியாயத்தின் தொடக்கமாகத் திகழ்ந்தது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஆர். மகேந்திரன், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் சிவா...
சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்!

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்!

News
சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்! பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்! *பெர்ப்லெக்ஸிடி ஏஐ* செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்று சாட்ஜிபிடி பரபரப்பாகப் பேசப்படுகிறது. அது தொடாத பகுதிகளிலும் கூட சிறப்பாகச் செயல்பட, கூடுதல் திறன்களோடு பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனம் வந்திருக்கிறது. சாட்ஜிபிடி என்பது படைப்புத் துறையிலும் உரையாடலிலும் பொதுத் தேவைகளுக்காகவும் பணியாற்றுகிறது எனில், பெர்ப்லெக்ஸிடி ஏஐ என்பதுஆய்வு நோக்கங்களுக்காகவும், உண்மை சரிபார்ப்புக்கும் பொருத்தமானதாக உள்ளது. கூகிளுக்கு நிகராக அல்லது அதை விட அதிகமான சாத்தியங்களைக் கொண்ட நிறுவனமாக பெர்ப்லெக்ஸிட்டியை உலகத்தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள். சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்ற தொழில்நுட்ப ஆளுமையாகவும், செயற்கை நுண்ணறிவுத்துறையின் முகங்களுள் ஒருவ...