காரி – திரைப்பட விமர்சனம்
கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிக் கொடி நாட்டிய 'சர்தார்' படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரித்திருக்கும் படம்தான் காரி.
சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ராஜ் கிரண், ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், ஜே டி சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
மலையாளப் படங்களில் நடித்து வரும் பார்வதி அருண் கதாயாகி வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களுக்கிடையே பொதுவாக உள்ள கோவிலை யார் நிர்வகிப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இரண்டு ஊர்காரர்களும் ஜல்லிக் கட்டு போட்டியை நடத்தி வெற்றி பெறும் அணியைச் சேர்ந்த ஊருக்கு கோவில் நிர்வாகத்தை ஒப்படைப்பது என முடிவு செய்கின்றனர்.
ஒரு ஊர்க்காரர்...
