“நவரசா” ஆந்தாலஜி படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா உடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் – கார்த்திக் சுப்புராஜ் !
"நவரசா" ஆந்தாலஜி படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா உடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் - கார்த்திக் சுப்புராஜ் !
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விரைவில் வெளிவரவுள்ள "நவரசா" ஆந்தாலஜி படத்தில் அமைதி உணர்வை மையமாக வைத்து, ஒரு பகுதியை இயக்கியுள்ளார். இப்பகுதியில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா இணைந்து நடித்துள்ளனர். தமிழின் முன்னணி கலைஞர்கள் பலர் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.
கவுதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியது குறித்து, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது...
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களை என் கல்லூரி நாட்களில் இருந்தே எனக்கு தெரியும். ஒரு திரைப்பட இயக்குநராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நடிகராக, இப்போது தான் தன் பயணத்தை தொடங்கியுள்ளதாக என்னிடம்...








