நல்ல கருத்து கலந்த நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’!
பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரை பற்றி புகழ்ந்து சொல்ல அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் 'Boy Next Door". அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படும் ஒரு மந்திரத்தை கொண்டிருப்பர், ஆனால் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே "நம்ம வீட்டு பசங்க" என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார்.
இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர்...
