Friday, December 13

Tag: karunaas

இயக்குனர் ராம்நாத் – கருணாஸ் மீண்டும் இணையும் ‘ஆதார்’!

இயக்குனர் ராம்நாத் – கருணாஸ் மீண்டும் இணையும் ‘ஆதார்’!

News
கருணாஸ் நடிப்பில் உருவாகும்  திரைப்படத்திற்கு 'ஆதார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது! 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்: ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி. எஸ். ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'பிக்பாஸ்' புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், வத்திக்குச்சி படப்புகழ் திலீப், 'பாகுபலி' பட புகழ் பிரபாகர், நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா இசை அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை கவனிக்க, படத்தொகுப்பை ஜெய் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை ஜான் பிரிட்டோ ஏற்க, இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ஏ பி ரவி பணியாற்றுகிறார...
எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடை – மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடை – மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

News
சென்னை- சேலம் இடையே 5 மாவட்டங்கள் வழியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.  இத்திட்டத்திற்கான தடைகோரிய வழக்கில் இன்று(8.4.2019) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இந்த வெற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.   இத்திட்டத்திற்காக 1,900 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறுவதற்கு முன்னே நிலம் அளவிடும் பணிகள் வேக வேகமாக தொடங்கப்பட்டன. எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, விவசாயிகளும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தினார். மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்தேறிய அதே சமயம் பூவுலகின் நண்பர்கள், ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. அதன் விளைவாக தமிழக அரசு செயல்படு...