கசட தபற – விமர்சனம்
கசட தபற - விமர்சனம்
மணம் வீசும் ஆறு மலர்கள்....
அவற்றை ஒன்றாகத் தொகுத்துக் கட்டிய அழகான கதம்பமாலை....
.
இதுதான் கசட தபற திரைப்படம்.
ஆறு தனித்தனி கதைகள். ஆனால் இவை அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவை. அந்தத் தொடர்பும் மிக அழகாக பின்னப்பட்டிருக்கிறது. கத்தி மேல் நடக்கும் வித்தை மாதிரியான வேலைதான் என்றாலும் கச்சிதமாக செய்திருக்கிறார் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கும் சிம்பு தேவன்.
ரெஜினா கேசாண்ட்ரா பிரேம்ஜி வரும் முதல் பகுதியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பிரைம்ஜி மீது திருட்டுப் பட்டம் கட்டி தாதா சம்பத் காதலை எப்படி முறித்தார் என்பது அடுத்த பகுதியில் விளக்கப்படுகிறது. தொடர்ந்து தாதாவுக்கு அவரது மகனே எப்படி முடிவு கட்டி தந்தையின் இடத்தில் அமர்கிறான் என சீராகச் செல்லும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் எதிர்பாரா திருப்பமும், யூகிக்க முட...
