‘காவல்துறை உங்கள் நண்பன்’ பட விநியோக உரிமையை கைப்பற்றிய தனஞ்செயன்
தயாரிப்பிலும், விநியோகாத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து பெருமையுடன் வலம் வரும் Creative Entertainers நிறுவனர் G தனஞ்செயன் அவர்கள் சுரேஷ் ரவி - ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார்.
தயாரிப்பாளர் G. தனஞ்செயன் கூறியதாவது...
நாங்கள் Creative Entertainers சார்பில் தரமான கதைகள் கொண்ட படங்களையே தயாரிப்பதையும், விநியோகிப்பதையும் முதல் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறோம். ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் அதே நேரம் அவர்களுக்கு தரமான கதைகளை தரவேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். இந்த நோக்கம் 2020 ஆம் வருடத்தில் பல நல்ல தரமான படங்களை விநியோகிக்கும் பயணத்தில் எங்களை கொண்டுவந்திருக்கிறது. இப்பயணத்தில் “காவல்துறை உங்கள் நண்பன்” படம் ஒரு அற்புதமான தேர்வாக எங்கள் முன்னால் வந்தது. இப்படத...

