‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ் (vintage)தோற்றம் வெளியீடு!
'பள்ளிச்சட்டம்பி' (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ் (vintage)தோற்றம் வெளியானது!
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் ( Kayadu Lohar ) கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த போஸ்டரில் கயாடு லோஹர் ஒரு விண்டேஜ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.
கன்னட திரைப்படமான 'முகில்பேட் ' ( Mugilpete) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளி...
