கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா!
கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா!
தமிழ் திரையுலகில் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர்களான கருணாஸ் - கிரேஸ் கருணாஸ் தம்பதிகளின் வாரிசும், 'அசுரன்' படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ் , பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதினை வென்ற 'இசை அசுரன்' ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மே...
