தமிழில் அறிமுகமாகும் HIT 3′ புகழ் கோமலி பிரசாத்!
'HIT 3' புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!
பல வகையான கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கோமலி பிரசாத். அவரது சமீபத்திய ஹிட் படம் 'HIT 3'. இதில் அவரது ASP வர்ஷா கதாபாத்திரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவாலானது. இந்தப் பயணம் இனிமையானதாகவும் அதே சமயம் அட்வென்சராகவும் இருந்ததாக சொல்கிறார் கோமலி. "இந்த பவர்ஃபுல்லான ஆக்ஷன் பேக்ட் கதாபாத்திரம் பார்த்து ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை கண்கலங்க வைத்து விட்டது. இதேபோன்று இன்னும் பல கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகி இருக்கிறது" என்றார்.
நானியுடன் இணைந்து நடித்திருப்பது மற்றுமொரு மறக்க முடியாத அனுபவம். அவர் ஒரு திறந்த புத்தகம் என்கிறார். "அவர் நடிகர் மட்டுமல்ல. எல்லாத் துறைகள் பற்றியும் அவருக்குத் தெரியும். சில ஆக்ஷன் மூவ்ஸூம் எனக்கு சொல்லித் தந்தார். பெரிய இன்ஸ...
