இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்!
தகுதியின் அடிப்படையில் எல்கேஜி படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியால் மொத்த படக்குழுவும் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரசிகர்களின் வாய்மொழி விளம்பரத்தால் நாளுக்கு நாள் தியேட்டர்களும், காட்சிகளும் அதிகரித்து வருகின்றன. ரசிகர்களிம் அபரிமிதமான வரவேற்பால் மொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கும்போது, ஒரு ஆச்சரியமான விஷயம் அரங்கேறி இருக்கிறது. தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் இயக்குனர் கே.ஆர்.பிரபுவுக்கு ஒரு கார் மற்றும் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாயை பரிசளித்தார். இதை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான ரவி வர்மன் தன் கைகளால் வழங்கினார். நிச்சயமாக, இந்த மகிழ்ச்சியான உணர்ச்சிமயமான கொண்டாட்ட நிகழ்வு தான் உண்மையான வெற்றி விழா.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இது குறித்து கூறும்போது, "ஒருவரையொருவர் மனதார நம்பியது தான் எங்களை இந்த அன்பான கொண்டாட்டத்தில் ஒன்று சேர...

