தங்கக் காசுகள் பரிசு தரும் ‘கிரிஷ்ணம் ‘படக்குழு
சினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு 'கிரிஷ்ணம்' படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர். கிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளுங்கள்.
கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் 'கிரிஷ்ணம் 'படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல ,இப்படத்தின் தயாரிப்பாளர்தான்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் ,தானே தயாரிப்பாளராகி பி என்.பலராம் என்பவர் இப்படத்தை எடுத்துள்ளார். 'கிரிஷ்ணம் ' என்கிற இப் படம் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வைக் கொண்டு உருவாகியுள்ளது.
அதே போல தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறர...
