இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!
மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது.
ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப் அவர்களது எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படமே 'யூ ஆர் நெக்ஸ்ட்'.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். உள்ளது. இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் ...

