கும்கி 2 _ விமர்சனம்
கும்கி 2 _ விமர்சனம்
மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுவன் பூமி, ஒரு நாள் பள்ளியில் இருந்து திரும்பும்போது பள்ளத்தில் சிக்கிக்கொண்ட யானை குட்டி ஒன்றை காப்பாற்றுகிறான்.
அப்போது முதல் அந்த யானைக் குட்டியுடன் சொந்த சகோதரனைப் போல் நெருக்கமாக பழகி வருகிறான்.
சாராயம் விற்கும் தாயார், மற்றும் தாயார் கணவனாக தன்னுடன் 'சேர்த்துக் கொண்ட நபர்' ஆகியோருடன் வசித்து வரும் பூமிக்கு ஒரே ஆறுதல் அந்த யானை குட்டி தான்.
யானை சற்றே வளர்ந்த பிறகு வியாபாரி ஒருவருக்கு அந்த யானையை விற்று விடுகிறார் பூமியின் தாயார்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வரும் பூமி, தன் செல்ல யானையைத் தேடி அலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்து விடுகிறார்.
ஆனால் இப்போது வேறு ஒரு பெரிய பிரச்னை முளைத்திருக்கிறது.
அரசியல்வாதிகள் சிலர் பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டு அந்த யானையை பலி கொடுக்க திட்டமிடுகின்றனர்.
யானையை வி...
