‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ !
உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் 'சாதக பறவைகள்' சங்கர் 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்
வார்வின் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஐ ராஜா தயாரிக்க, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர் பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களில் முன்னணி இயக்குனர் சீனுராமசாமியிடம் துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.
இத்திரைப்படம் இன்றைய காலகட்டத்தில், மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் மதுவுக்கு அடிமையான ஒருவர், தன்னை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, முன்னெடுக்கும் புரட்சிகரமான நடவடிக்கைகளை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது. தனிமனித வாழ்வின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக இது அமையும்.
சாஸ்திரீய இசை அனைவருக்கும் ப...
