குரங்கு பெடல் _ விமர்சனம்
குரங்கு பெடல் விமர்சனம்
குழந்தைகள் படம் என்ற பெயரில் வரும் அபத்த களஞ்சிய படங்களுக்கு மத்தியில் நெஞ்சை தொடும் விதத்தில் வந்திருக்கும் நிஜமான குழந்தைகள் படம் குரங்கு பெடல்.
சிறுவயதில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்ட அனுபவம் பலருக்கும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கும். அத்தகைய அழகான அனுபவங்களை வைத்து, ரசிக்கத்தக்க காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட படம்தான் குரங்கு பெடல்.
கிராமத்தில் நெசவு வேலை செய்யும் காளி வெங்கட் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளாததாலேயே பல இடங்களுக்கு நடந்தே செல்கிறார். இதனால் அவரை நடராஜா சர்வீஸ் என்று ஊர் மக்கள் கேலி செய்கிறார்கள். அவரது மகன் சந்தோஷ் வேல்முருகன் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட பழகுகிறார்.
சொந்தமாக ஒரு புதிய சைக்கிளை கொண்டு வரும் நண்பனுடன் மற்ற நண்பர்கள் சென்றுவிட, தனியாகவே வாடகைக்கு ஒரு சைக்கிள் எடுத்து குரங்கு பெடல் போட்டு பழகுகிறான் சந்தோஷ்....
