லப்பர் பந்து _ விமர்சனம்
லப்பர் பந்து: விமர்சனம்
இன்னும் ஒரு கிரிக்கெட் படமா என்று ஆரம்பத்தில் சற்று அயற்சி தோன்றினாலும் இது முற்றிலும் மாறுபட்ட ரசிக்கத் தகுந்த கிரிக்கெட் படமாக மலர்ந்திருக்கிறது.
ஜாலி பிரெண்ட்ஸ் கிரிக்கெட் குழுவின் தலைவன் காளி வெங்கட். தனது ஊரில் உள்ள இந்த கிரிக்கெட் குழுவில் விளையாட வேண்டும் என்பது சிறு வயது முதலே ஹரிஷ் கல்யாண் ஆசை.
ஹரிஷ் கல்யாண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை காரணம் காட்டி அவரது கிரிக்கெட் ஆசையில் மண்ணை போடுகிறார் வைஸ் கேப்டன்.
இதேபோல் மற்றொரு ஊரில் உள்ள கிரிக்கெட் குழுவில் விளையாடும் அட்டக்கத்தி தினேஷ் கெத்து என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். கைக்குட்டையை சுருட்டி பேட்டின் கைப்பிடியை சுற்றி கெத்து காட்டுவதில் துவங்கி, மட்டையை சுழற்றி பந்தை அடிப்பது வரை கெத்து காட்டுவது இவரது ஸ்பெஷாலிட்டி.
கெத்துவின் மனைவிக்கோ கணவன் கிரிக்கெட் விளையாட செல்வது பிடிக்காது. ஆயினு...
