அதர்வா முரளியுடன் ஜோடி சேரும் லாவண்யா திரிபாதி!
அதர்வா முரளி நடிப்பில் புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடிகை லாவண்யா திரிபாதி ஒப்பந்தமாகியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியது...
எங்கள் படத்திற்கு ஹீரோயின் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான பணியாக இருந்தது. இப்படத்தின் நாயகி பாத்திரத்தை முழுமையாக வடிவமைத்த பிறகு இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க நல்ல கவர்ச்சியான, மென்மை மிகுந்த நேர்த்தியான, நாயகியாக இருக்க வேண்டும் தேடினோம். அதே நேரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கும் திறமையும் வேண்டும் என்று நினைத்தோம். கண்மூடித் திறக்கும் நேரத்தில் வந்து போகக்கூடிய பாத்திரம் அல்ல இது. படம் முழுதும் பயணம் செய்யும் அழுத்தமான சக்தி வாய்ந்த பாத்திரம். யோசித்துகொண்டிராமல் தெளிவாக முடிவை எடுக்கும் பாத்திரம். மற்றவர்கள் மீது வலியை திணிக்கும் பட...
