விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘LBW- லவ் பியாண்ட் விக்கெட்’ இணைய தொடர்!
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'LBW- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள 'LWB- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற ஒரிஜினல் வெப் சீரிஸ் மூலமாக நடிகர் விக்ராந்த் ஓடிடியில் அறிமுகமாகிறார். இந்த இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது.
இதன் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றதுடன் நடிகர் விக்ராந்த் கரியரில் திருப்புமுனை ஏற்படுத்தும் கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் அவரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
'கனா காணும் காலங்கள்', 'ஹார்ட்பீட்' (சீசன் 1 & 2), 'உப்பு புளி காரம்', 'ஆஃபிஸ்' மற்றும் 'போலீஸ் போலீஸ்' ஆகிய நூற்றுக்கும் அ...

