Friday, May 1

Tag: Leela Samson

“மன்னிக்கும் மனம் வேண்டும்” – ‘மனம்’ குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி!

“மன்னிக்கும் மனம் வேண்டும்” – ‘மனம்’ குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி!

News
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் தற்போது ‘மனம்’ என்கிற குறும்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். குறும்படம் என்றாலும் சுமார் நாற்பது நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள லீலா சாம்சனும், பரணிதரனும் தான் இந்த குறும்படத்தின் ஆணிவேர்கள் என்றால் அதில் மிகையில்லை. லீலா சாம்சன்,, ஓகே கண்மணி படத்தில் தனது இயல்பான அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். இந்தக் குறும்படத்தின் கதையோட்டத்துடன் இணைந்து அவர் நடித்த விதத்தை பார்க்கும்போது ஒரு திரைப்படம் பார்த்த உணர்வே நமக்கு ஏற்படுகிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து லீலா சாம்சன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “மணிரத்னம் சார் இயக்கத்தில் ''ஓகே கண்மணி' படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அதில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராம் மகேந்திரா என...
ஏகோபித்த வரவேற்பில்  “சில்லுக்கருப்பட்டி”

ஏகோபித்த வரவேற்பில் “சில்லுக்கருப்பட்டி”

News
கடந்த பல வருடங்களில் பல புதிய பரிசோதனை முயற்சிகளை நிகழ்த்தி திரையில் சாதனை படைத்து வந்திருக்கிறது  தமிழ் சினிமா. ஆனால் ஆந்தாலஜி எனும் வகை தமிழ்சினிமாவில் பலகாலமாக முழுமையாக நிகழாமல் இருக்கிறது. இந்த வகை படங்களை ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின்  ராம் கோபால் வர்மாவின்  ‘தர்னா மானா ஹை முதல் பாம்பே டாக்கீஸ்’ வரை கொண்டாடி தீர்க்கும் தமிழ் ரசிகர்கள் தமிழிலும் இது போல் படம் எப்போது நிகழும் எனும் ஏக்கத்தில் இருந்தனர். அவர்களின் ஏக்கத்தை துடைத்து அனைவரும் கொண்டாடும் ஒரு படைப்பாக வந்திருக்கிறது ஹலிதா சமீமின் “சில்லுக்கருப்பட்டி”. ஆந்தாலஜி முறையில் நகர பின்னணியில் அன்பை பேசும் நான்கு கதைகளை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது “சில்லுக்கருப்பட்டி”. பத்திரிகை முன் திரையீடுகளில் நேர்மறை விமர்சனங்களால் பாராட்டை குவித்த “சில்லுக்கருப்பட்டி” படம் இப்போது நகரம் மட்டுமல்லாது தமிழகம் முழுதும் அதிகளவ...
சமுத்திரகனி, சுனைனா நடிக்கும் சில்லு கருப்பட்டி…

சமுத்திரகனி, சுனைனா நடிக்கும் சில்லு கருப்பட்டி…

News
இந்த சமூகத்தில் காதல் குறைந்து கொண்டே போகிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த நம்பிக்கைகளை புதுப்பிக்கும் நேரம் வந்துவிட்டது.  நிச்சயமாக, ஒவ்வொரு காதலர் தினத்திலும் இசை காதலர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், இந்த 'பிப்ரவரி'யும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சில்லு கருப்பட்டி படத்தின் "அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு" என்ற அழகான பாடல் வரிகள் மற்றும் மூலம் நமது இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சில்லு கருப்பட்டி சிங்கிள் தெய்வீகமான காதலின் ஆழத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பின் மழையில் அனைவரும் நிச்சயம் நனைவார்கள்.    பாடலுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பற்றி இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, "காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொண்டது, நாம் முன்னர் சந்தித்திராத ஒருவரை சந்திப்போம், ஆனால...