Friday, October 23

Tag: love-review

லவ் — திரைப்பட விமர்சனம்

லவ் — திரைப்பட விமர்சனம்

Reviews
எளிமையான கவிதையைப் போல் அழகாக தொடங்குகிறது  பரத் வாணி போஜன் இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பு. திருமணம் செய்து கொள்வதற்காக தன் தந்தை ராதாரவி ஏற்பாடு செய்த பரத்தை பார்ப்பதற்காக ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு வருகிறார் வாணி போஜன். முதல் சந்திப்பிலேயே ஒருவருக்கொருவர் பிடித்துப் போய்விட திருமணத்தில் முடிகிறது திருமண சீராக மகளுக்கு ராதாரவி வாங்கித் தரும் வீட்டை கூட ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டும் அளவுக்கு சுயமரியாதை மிக்கவராக இருக்கிறார் பரத். வியாபாரத்தில் வெற்றி பெற்ற பிறகு தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பரத் நினைக்கிறார். தாம்பத்திய வாழ்க்கையில் வாணி போஜன் கர்ப்பமடைந்து இருப்பதை டாக்டர் உறுதிப்படுத்துகிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்ல வீட்டுக்கு வரும் வாணி போஜன், பரத் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து கோபமடைகிறார். இதனால் ஏற்படும் வாக்கு வாதம் சண்டையில் முடிகிறது....