ஹாலிவுட் திரையுலக பெருமகன் அசோக் அமிர்தராஜின் தாயார் மரணம்
திருமதி. மேகி அமிர்தராஜ், ஹாலிவுட் திரையுலக பெருமகன் அசோக் அமிர்தராஜின் தாயார் மரணம்
கடந்த ஏப்ரல் 20ம் தேதி, ஈஸ்டர் வார இறுதியில், உயர் ஆளுமை கொண்ட திருமதி. மேகி அமிர்தராஜ், சென்னையில் தனது இல்லத்தில் காலமானார்.
இவர் ஹாலிவுட்டின் வெற்றிகரமான, புகழ்வாய்ந்த இந்திய வம்சாவளி தயாரிப்பாளரும், டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் மற்றும் அவரது சகோதரர்களான இந்திய விம்பிள்டன் நட்சத்திரங்கள், விஜய் மற்றும் ஆனந்த் அமிர்தராஜின் தாயார் ஆவார்.
திருமதி அமிர்தராஜ் ஒரு சிறந்த ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும், கனவு காண்பவராகவும், ஒழுக்கமானவராகவும், நல்ல மனைவியாகவும், சிறந்த தாயாகவும் திகழ்ந்தார்.
ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஒரு சுதந்திரமான பெண்மணி என்ற போதிலும், திருமதி அமிர்தராஜ் தனது குடும்பத்திற்கே எப்போதும் முன்னிரிமை அளித்தவர். தனது இ...
