ஹாலிவுட் திரையுலக பெருமகன் அசோக் அமிர்தராஜின் தாயார் மரணம்

0

 368 total views,  1 views today

திருமதி. மேகி அமிர்தராஜ், ஹாலிவுட் திரையுலக பெருமகன் அசோக் அமிர்தராஜின் தாயார் மரணம்

 கடந்த ஏப்ரல் 20ம் தேதி, ஈஸ்டர் வார இறுதியில், உயர் ஆளுமை கொண்ட திருமதி. மேகி அமிர்தராஜ், சென்னையில் தனது இல்லத்தில் காலமானார்.

 இவர் ஹாலிவுட்டின் வெற்றிகரமான, புகழ்வாய்ந்த இந்திய வம்சாவளி தயாரிப்பாளரும், டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் மற்றும் அவரது சகோதரர்களான இந்திய விம்பிள்டன் நட்சத்திரங்கள், விஜய் மற்றும் ஆனந்த் அமிர்தராஜின் தாயார் ஆவார்.

  திருமதி அமிர்தராஜ் ஒரு சிறந்த ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும், கனவு காண்பவராகவும், ஒழுக்கமானவராகவும், நல்ல மனைவியாகவும்,  சிறந்த தாயாகவும் திகழ்ந்தார்.

 ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஒரு சுதந்திரமான பெண்மணி என்ற போதிலும், திருமதி அமிர்தராஜ் தனது குடும்பத்திற்கே எப்போதும் முன்னிரிமை அளித்தவர். தனது இரு குழந்தைகளுக்கும் தனது சுய சம்பாத்தியத்திலிருந்து இரண்டு டென்னிஸ் மட்டைகளை வாங்கியவர். 1950/60 களில் எப்படி ஒரு பெண் இத்தனை பெரிய கனவுகளுடன் இருந்திருப்பார்? ஸ்டேர்லிங் சாலையில் காத்தாடிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த மூன்று சிறுவர்களை, மூன்று டென்னிஸ் நட்சத்திரங்களாக, இரண்டு ஐக்கிய நாட்டு சபை தூதுவர்களாக (தற்போது அசோக் அமிர்தராஜ், அதற்கு முன்னர் விஜய் அமிர்தராஜ்), ஒரு ஹாலிவுட் திரையுலகப் பெருமகனாக உருவாக்கியிருக்கிறார். இவையனைத்தும் மேகியின் படைப்புகள், சிறுவர்கள் மூவரும் அதற்கு துணையாக இருந்தனர்.

திருமதி அமிர்தராஜ் தனது மகன்களிடம் குடும்பத்தின் மதிப்பு, முக்கியத்துவம், அதன் வேர்கள் குறித்து உயர்ந்த எண்ணங்களை விதைத்திருந்தார். அதன் காரணமாக மூவரும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்தாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட கொண்டாட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பெற்றோருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இத்தகைய ஆழமான குடும்ப பிணைப்பு தற்போது அவர்களது பேரக் குழந்தைகளுக்கும் விதைக்கபடுகிறது. மேகி மற்றும் ராபர்ட் அமிர்தராஜின் மரபுகள், குழந்தைகளின் மூலம் பேரக் குழந்தைகளையும் சென்றடைகிறது.

‘செவாலியர் டாக்டர். அசோக் அமிர்தராஜ்

இந்திய நல்லிணக்க தூதர்,

ஐக்கிய நாடுகள் சபை,

தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி,

ஹைட் பார்க் எண்டர்டைன்மென்ட் குழுமம்.

Share.

Comments are closed.