‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ _ இணைய தொடர் விமர்சனம்
மண்ணின் மைந்தர்களின் கனவுப் பயணம் –
'மம்மட்டியான் ஸ்டார்ஸ்' ஒரு அலசல்!
ஜீ5 ஓடிடி தளத்தில் களமிறங்கியுள்ள 'மம்மட்டியான் ஸ்டார்ஸ்', வழக்கமான ஸ்போர்ட்ஸ் டிராமாக்களின் சுவடுகளே இல்லாத ஒரு மாற்று வடிவம்.
கவனம் ஈர்க்கும் கேமரா lகோணங்களோ, அதிரடி சண்டைக்காட்சிகளோ இல்லாமல், ஒரு மிகச்சிறந்த கதையை எப்படி எதார்த்தமாகச் சொல்ல முடியும் என்பதற்கு இந்தத் தொடர் ஒரு சிறந்த உதாரணம்.
கதை சொ(செ)ல்லும் விதம்:
ஒரு சிறிய ஊரின் பின்னணியில், சாதிக்கத் துடிக்கும் சில இளைஞர்களின் கதை இது. வறுமை, குடும்பப் பாரம், தனிப்பட்ட தோல்விகள் எனப் பல தடைகளைத் தாண்டி, விளையாட்டின் மூலம் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் போராட்டம்தான் படத்தின் இதயம். இதில் விளையாட்டு என்பது வெறும் வெற்றி தோல்வி சார்ந்தது மட்டுமல்ல; அது அவர்களின் வாழ்வியல் மாற்றத்தை எப்படி வடிவமைக்கிறது என்பதை இயக்குநர் சவிர் சுதாகர் மிக நுண...
