Wednesday, September 30

Tag: Manju Warrier

ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’!

ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’!

News
அசுரன், துணிவு படங்களை தொடர்ந்து ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்! ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr. X) திரைப்படத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது. இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சவாலான வேடத்தை ஏற்றிருக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. பொழுதுபோக்கு கலந்த ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்தப்படத்தை ‘எப்ஐஆர்’ புகழ் இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லஷ்மன்குமார் இந்தப்படத்தை உயர்ந்த தொழிநுட்ப தரத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கிறார். மிஸ்டர் எக்ஸ் (Mr. X) படத்திற்காக இந்தியா, அசர்பைஜான் ...
மஞ்சு வாரியர்-சைஜு ஶ்ரீதரன் இணையும் ‘ஃபுட்டேஜ்’!

மஞ்சு வாரியர்-சைஜு ஶ்ரீதரன் இணையும் ‘ஃபுட்டேஜ்’!

News
மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது !! திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான "ஃபுட்டேஜ்' படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது. "அஞ்சம் பாதிரா", "கும்பளங்கி நைட்ஸ்," மற்றும் "மஹேஷின்டே பிரதிகாரம்" போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தியத் திரையுலகின் மிகப்பிரபலமான ஆளுமையாக விளங்கும் நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன் விசாக் நாயர் மற்றும் காயத்ரி...
‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!

‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!

News
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார். இதன் பிறகு அவர் பேசுகையில், '' முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்...