Friday, October 24

Tag: mari selvaraj

நிஜ பைசனுக்கு உதவிய ஆசிரியருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!

நிஜ பைசனுக்கு உதவிய ஆசிரியருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!

News
பைசன் படத்தின் நிஜ நாயகன் மனத்தி கணேசனுடன் அவரது உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் திரு . தங்கராஜ் அவர்களை இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் மக்களிடம் வரவற்பை பெற்று திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். பைசன் படத்தில் துருவ் கபடி வீரராக நடித்திருக்கிறார், படத்தில் அவருக்கு ஊக்கமளிக்கும் உடற்பயிற்சி ஆசிரியராக நடிகர் மதன் நடித்திருக்கிறார். தென் தமிழகத்து மக்களின் வாழ்வியலையும், கபடி விளையாட்டையும் நிஜ கபடி வீரர் மனத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையையும் இந்தப்படம் பேசுகிறது. நிஜத்தில் மனத்தில் கணேசனுக்கு உதவிய ஆசிரியர்தான் மெஞ்சனாபுரம் தங்கராஜ் அவர்கள். இன்று இயக்குனர் மாரிசெல்வராஜ் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ...
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் அக்டோபர் 11 முதல் ஸ்ட்ரீம் ஆகும்“வாழை”!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் அக்டோபர் 11 முதல் ஸ்ட்ரீம் ஆகும்“வாழை”!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் அக்டோபர் 11 முதல், இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படமான “வாழை” திரைப்படத்தினை ஸ்ட்ரீம் செய்கிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல், இயக்குநர் மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான “வாழை” திரைப்படத்தை ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம், இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த படைப்பாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இதயத்தைத் தொடும் ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது. தன் விதவை தாய் (ஜானகி) மற்றும் அவரது மூத்த சகோதரி வேம்பு (திவ்யா துரைசாமி) ஆகியோருடன் வசிக்கும் இளம் சிற...
வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

News
Disney+ Hotstar, Navvi Studios மற்றும் Farmer’s Master Plan Production வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “வாழை”. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இப்படத்தினை இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா, படக்குழுவ...
இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படம் ‘பைசன் காளமாடன்’ !

இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படம் ‘பைசன் காளமாடன்’ !

News
இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படம் 'பைசன் காளமாடன்' ! இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு 'பைசன் காளமாடன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது !! அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'பைசன் காளமாடன்' திரைப்படம் இனிதே துவங்கியது !! அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் பல புதிய திரைப்படங்களை இணைந்து தயாரிக்கவுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு...
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம்!

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம்!

News
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது ! Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  தற்போத...
பிரான்ஸ் நாட்டின் படவிழாவில் பரியேறும் பெருமாள்!

பிரான்ஸ் நாட்டின் படவிழாவில் பரியேறும் பெருமாள்!

News
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி வெற்றிபெற்ற பிறகும் வெளி நாடுகளில் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்படத்திருவிழாவில் திரையிடப்படுகிறது. புதிய படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் படங்கள் திரையிடுவது வளக்கம் ஆனால் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி பல மாதங்களுக்குப்பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்சியை தருகிறது என்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்....