Wednesday, September 2

Tag: Market Raja MBBS

நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.!

நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.!

News
எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் மோகன், நவம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிரந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழச்சியடைகிறேன். உண்மையில் சொல்லப்போனால், தற்கால ரசிகர்களின் ரசனைக்கேற்ற ப...
காது கேட்காத வாய் பேச முடியாத வேடத்தில் நடித்து அசத்திய ரோகிணி!

காது கேட்காத வாய் பேச முடியாத வேடத்தில் நடித்து அசத்திய ரோகிணி!

News
ரோகிணி! ஆகச் சிறந்த நடிகைகளில் இவருக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு! 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்'திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் பட்டாளம் சுந்தரிபாய் பாத்திரத்தில் நடிக்க,அவருக்கு நேரெதிரான லதாம்மா என்ற காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அன்னை வேடத்திற்காக ரோகிணி அவர்களை அணுகினேன். அவரிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை அந்த லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்.அவருடனான உரையாடல்கள்,காட்சி விவரங்களைக் கூட அதன்பின் சைகை மொழியிலேயே என்னை சொல்லப் பணித்தார்... கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருடன் பயிற்சிப் பட்டறையாக அது விரிவடைந்தது. படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி புரியும் ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணை எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரோகிணி! ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் காட்சி முடிந்தவுடன...
சரண் இயக்கும்  மார்கெட் ராஜா MBBS படத்தில் நிகிஷா படேல்!

சரண் இயக்கும் மார்கெட் ராஜா MBBS படத்தில் நிகிஷா படேல்!

News
இயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் - உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல். இப்படத்தின்  தலைப்பு மார்கெட் ராஜா MBBS ஆகும்.   "நான் இந்தபடத்தில் ஆரவ் காதலியாக நடித்திருக்கிறேன்  மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் K.V குகன் தனது வேலையை அருமையாக செய்துள்ளார்."    நிகிஷா படேல் தற்போது G.V. பிரகாஷ் குமார் நடித்து இயக்குநர் எழில்  இயக்கும் திகில் படத்திலும் இணைந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பையும்  முடித்துவிட்டார். சமீபத்தில் தான் இவர்  T-series இந்தி இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ந...