Friday, October 23

Tag: mayuran review

மயூரன் – விமர்சனம்

மயூரன் – விமர்சனம்

Reviews
காணாமல் போன நண்பனைத் தேடி இரண்டு இளைஞர்கள் தெருத்தெருவாக அலைவதில் ஆரம்பிக்கிறது மயூரன். நண்பர்கள் இருவரும் பைக்கில் தெருத்தெருவாக சுற்றி அலைந்து ஏதோ ஒரு குழந்தையைத் தேடுவதைப்போல், எதிர்படுகிறவர்களிடம் கேள்விகள் கேட்டு விசாரிப்பதையே இடைவேளைவரை காட்டுகிறார்கள் என்றால் படம் எப்படி இருக்கும் என்பதை நீங்களை புரிந்து கொள்ளலாம். தாளாளர் ஒருவரே தன் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களை வைத்து போதை மருந்து கடத்துவதாக ஒரு அபத்தமான கதைக் களத்தை அமைத்துக்கொண்டு அதை படமாக வேறு எடுத்திருக்கிறார்கள். ஆர்வக்கோளாறில் நடிக்க வருபவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு படமெடுக்கும் உப்புமா கம்பெனி படத்தில் வரும் நடிக நடிகையரைப்போல் இருக்கிறார்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள். வில்லனாக வரும் வேல.ராமமூர்த்திதான் படத்தில் தெரிந்து ஒரே முகம். இவர் பெரிய்ய்ய்ய எழுத்தாளராம். படத்தில் இவர் ஒரு வ...