மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!
திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!
நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் 'ஹபீபி'.
மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து 'யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டிய...
